Sunday, May 13, 2012

மரங்கொத்திப் பறவைகளின் அதிசயம்........



மரங்கொத்திப் பறவைகள் தங்களுடைய அலகுகளினால் மரத்தைப் கொத்துவதைப் பார்த்திருப்போம். ஒரு மனிதன் ஆணியை சுவரில் அடிக்க எவ்வளவு பலத்தைப் உபயோகிப்பானோ, அவ்வளவு பலத்தைப் மரங்கொத்திப் பறவைகள் உபயோகித்து மரத்தை துளையிடுகின்றது. மரங்கொத்திப் பறவையின் தலை, மரத்தைக் கொத்துவதேற்றாற் போல் அமைந்து காணப்படுகின்றது. முதலாவதாக அவைகளின் மூளை கனமான மண்டை ஓட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக மரங்கொத்தி பறவையின் மண்டை ஓட்டின் அடிப்பாகத்தில் மெத்தை போல திசுக்கள் இருக்கின்றன. மரத்தைக் கொத்தும்போது உண்டாகும் மூன்றில் இரண்டு பாக அதிர்வுகளை இந்த மெத்தை போன்ற திசுக்கள் தாங்கிக்கொள்கின்றன. மற்றும் கழுத்தைச் சுற்றியுள்ள பலமான தசைகள் தாங்கிக்கொள்கின்றது. இரண்டு அல்லது மூன்று  நொடிகளில் 3843 முறை ஒரு மரத்தைக் கொத்துகிறது.

மரங்கொத்திகள் துளையிடுவதற்கு பெரும்பாலும் பைன்(Pine) மரத்தையே தேர்ந்தெடுக்கின்றன. அவ்வாறு தேர்ந்தெடுக்கும் மரத்திற்கு 100 வயதிற்கு மேற்பட்டதாக இருக்கும். ஏனெனில்  100 வயதிற்கு மேற்பட்ட பைன் மரங்களுக்கு ஒரு வியாதி ஏற்படுவதினால் அவற்றின் தடிப்பான மரப்பட்டை மிருதுவாகி விடுகின்றன. விஞ்ஞானிகளால் இது சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது.

பைன் மரத்தைப் மரக்கொத்திகள் தெர்ந்தெடுப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கின்றது. தங்கள் கூட்டை மரங்கொத்திகல் சிறு சிறு துவாரமிடுகின்றன. பைன் மரத்திலிருந்து வடியும் பிசின் அவற்றில் நிரம்பி சிறுகுளம் போலாகி விடுகின்றன. இந்தப் பிசின் குளங்கள் மரங்கொத்திப் பறவைகளின் மாபெரும் எதிரியான பாம்புகளிடமிருந்து பாதுகாப்பை அளிக்கின்றது.

Thursday, April 12, 2012

4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் தாக்கிய சுனாமி.........

                                   
2004ம் ஆண்டு இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்ட சுனாமி தமிழகத்தைத் தாக்கியது நாம் அனைவரும் அறிந்ததே. தமிழகத்தைச் சுனாமி தாக்கியது இது முதல் முறையல்ல. 4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் சுனாமி தாக்கியிருக்கிறது. பின்னர் கி.பி 2ம் நூற்றாண்டிலும் பூம்புகார் என்ற காவிரிப் பூம்பட்டினத்தைப் கடல் கொள்ளை கொண்டு போயிருக்கிறது.

அந்தக் காலத்தில் சுனாமியை இலக்கியம் "கடல்கோள்" என்று குறிப்பிடுகின்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் தென்பகுதி, பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இப்போதைய இலங்கை, மாலைதீவு, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகியவையெல்லாம் ஒன்றாக இணைந்திருந்த அந்த நிலப்பரப்பை மேற்குலகத்தினர் "லெமூரியா" என்று குறிப்பிடுகின்றனர். தமிழகத்தில் பண்டைய இலக்கியம் அந்த நிலப்பரப்பைக் "குமரிக் கண்டம்" என்று குறிப்பிடுகின்றது.

இப்போதைய இந்தியாவின் வட எல்லையில் உள்ள இமய மலையைப் போல் உயர்ந்த மலை அங்கு இருந்தது. குமரிக்கோடு (கோடு என்றால் மலை என்பது பொருள்) என அந்த மலை அழைக்கப்பட்டது. அதைப்போல் குமரியாறு, பஃறுளியாறு ஆகியவை கங்கை, யமுனை நதிகளைப் போல் பரந்து விரிந்து நீண்ட தூரம் ஓடின. அந்த நிலப்பகுதியில் இருந்த தென் மதுரை நகரில்தான் முதல் தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வந்தது. அந்த நிலப்பகுதி முழுவதையும் கடல் கொள்ளை கொண்டு விழுங்கிவிட்டது.

அதன்பிறகு, மிஞ்சிய தமிழ் நாட்டின் தலை நகராக கபாடபுரம் இருந்தது. அதுவும் சில நூறு ஆண்டுகளில் கடலால் விழுங்கப்பட்டது. அதையடுத்து, இப்போதைய மதுரையைத் தலை நகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி புரிந்தனர். அங்கே மூன்றாம் தமிழ்ச்சங்கம் நடைபெற்று வந்தது.

தென் தமிழகப் பகுதி கடலால் கொள்ளை கொள்ளப்பட்ட தகவல்களை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் கூறுகிறது. பஃறுளியாறும் மிக நீண்ட குமரி மலையும் கொடுமையான கடலால் கொள்ளை கொள்ளப்பட்டதையடுத்து, வடக்கு திசையில் கங்கையும் இமயமும் உருவான பின் தென் திசையை ஆண்ட மன்னன் என்று பாண்டிய மன்னனைப் பாடுகின்றது சிலப்பதிகாரம்.

இதனுடன் தொடர்புடைய இன்னொரு பதிவு..........


குறிப்பு நேற்றைய தினம் இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்தியத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திமிக்க பூகம்பங்களைத் தொடர்ந்து இலங்கை உட்பட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் சுனாமி எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். 



நேற்றைய தினம், இந்தோனேசியாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் அதிர்வுகள் இலங்கையின் பல பாகங்களிலும் எதிரொலித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


*** நேற்றைக்கு முதல் தினமே "4000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தைத் தாக்கிய சுனாமி" என்கின்ற இப்பதிவினை பதிவிட எண்ணியிருந்தேன் என்பதையும் நண்பர்களுக்கு அறியத்தருகின்றேன்.

++++++++++++---------++++++++++++++++++++


"நந்தன" சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!!!


 

பதிவுலக நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும்  "நந்தன" சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.


மேலும், மலரப்போகும் "நந்தன" புத்தாண்டானது தமிழர் வாழ்வில் செளபாக்கியத்தையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமைய வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

பிறக்கின்ற "நந்தன" புதுவருடம் எங்கள் வாழ்க்கை நந்தவனமாக பூத்துக்குலுங்க வழிவகை செய்வாயாக.........

***

Thursday, March 29, 2012

உல்லாசப் பிரயாணிகளின் சொர்க்காபுரி………

யுனான் மாகாணமானது தென்மேற்கு சீனாவில் வெப்பமான மற்றும் ஈரப்பதன் நிறைந்த பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இந்தப் பிராந்தியத்தின் மண்ணானது இரும்புத் தாது நிறைந்த வளமான பகுதியாக உள்ளது. இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள குன்மிங் நிலமானது சிவப்பு நிற நிலங்களுக்குப் பெயர்பெற்ற இடமாக விளங்குகின்றது.



இங்கே மலைகளைச் சுற்றிக் காணப்படுகின்ற சாய்வு நிலங்களில் பல்வேறு குடும்பங்களினைச் சேர்ந்தவர்கள் வித்தியாசமான பலதரப்பட்ட ஓட்ஸ், உருளைக்கிழங்கு, சோளம் போன்ற பல்வேறு பயிர்களினையும் பயிரிடுகின்றனர். ஒவ்வொரு பயிரும் தனக்குரிய நிறத்தினைக் கொண்டிருக்கும் அதேவேளை மலை உச்சியின் மீதிருந்து தரையினைப் பார்க்கின்ற போது அவை வானவில் போன்று வித்தியாசமான அழகிய தோற்றத்தில் காட்சியளிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



இந்தப் படங்களினைப் பாருங்கள் இந்த அழகினை வர்ணிக்க வார்த்தைகளே கிடைக்காது…….. சரிதானே?........ சீனாவுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தால் மறக்காமல் இயற்கையின் விந்தையினை தவறவிடாதீர்கள்………











***
Blog Widget by LinkWithin